Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு… வீடியோ வெளியிட்ட படக்குழு! #Vidaamuyarchi

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். பல வருடத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது.

அடுத்தடுத்து படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது படக்குழு. இதைத் தொடர்ந்து படக்குழு விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், லைகா தனது எக்ஸ் தளபக்கத்தில் விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என்று படக்குழுவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News