Saturday, September 14, 2024

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்… #TrainMovieUpdate

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்துக்கு மிஷ்கினே இசையமைக்கிறார். பெளசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த படத்துக்காக மிஷ்கின் நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளார். இதில் ஒரு பாடலை ஸ்ருதிஹாசனை வைத்து பாடவைத்துள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் முடிந்துள்ளது. மேலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் இன்னும் ரிலீஸ்க்கு வராமல் காலதாமதமாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News