சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் படம் தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரபரப்பான தகவல்கள் வெளியாகின. அதோடு, இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென, அப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டு, வெற்றிமாறனும் சூர்யாவும் வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில், வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வந்தன. எனினும், இதுபற்றிய எந்தவொரு அறிவிப்பும் படத்தை தயாரிக்கும் எஸ். தாணுவிடமிருந்து வெளியாகவில்லை. இப்படியான சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அந்த விழாவில் தயாரிப்பாளர் எஸ். தாணுவும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய வெற்றிமாறன், “ரொம்ப நாளாவே வாடிவாசல் வருது வருது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரமே படத்தை தொடங்கி விடுவோம்” என்று கூறினார். இதனால், வாடிவாசல் கைவிடப்படவில்லை, விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.