நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராக மாறி இயக்கிய படம் லூசிபர். மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருந்தது. மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. 2019ல் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமாக மீண்டும் பிரித்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் முதல் பாகமான லூசிபர் படத்தை எம்புரான் ரிலீசுக்கு முன்னதாக ரீ ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இதனால் இரண்டாம் பாகத்தை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000153197.jpg)