சமூகவலைத்தங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக ‘ரீல்ஸ்’, ‘சார்ட்ஸ்’ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வப்போது வரும் பாடல்களுக்கு பெண்கள் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ஜெயிலர் மற்றும் அரண்மணை படங்களில் தமன்னா ஆடிய நடனத்தை அனைவரும் ஆடி வெளியிட்டனர். இந்த ரீல்ஸ் நடனங்கள் என்னை போன்ற நடிகைகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்று தமன்னா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒருகாலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூகவலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது’ என்றுள்ளார்.