Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகர்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், ‘கூலி’ படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.’கூலி’ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வருவதால், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News