பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிரவன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். சினிமாவில் இது என்ன மாயம் படத்திலும் வதந்தி, மாய தோட்டா ஆகிய வலை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது யாத்திசை படத்தை தயாரித்த வீனஸ் இன்போடெயின்மெண்ட் தாயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட குமரனுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


