விடாமுயற்சி படம் வெளியாக விடாமுயற்சி செய்ய வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது, காரணம் படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டதால், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுபடப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் தல அஜித், இடைவேளையில் தனது பைக்கில் சுற்றி வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது, அஜித் தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் சந்தித்து உரையாடியுள்ளார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பும், சிரஞ்சீவி நடிக்கும் ‘விஷ்வாம்பரா’ படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெறுவதால், அஜித் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியுடன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அஜித்தும் சிரஞ்சீவியும் 30 ஆண்டுகளுக்கு முன் ‘பிரேம புஸ்தகம்’ என்ற அஜித்தின் முதல் தெலுங்கு படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படமும் , தற்போதும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.