‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘டார்லிங் 2’, ‘மாநகரம்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘கேங்கர்ஸ்’ போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் முனீஸ்காந்த். தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மிடில் கிளாஸ்’.
இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். தேவ் மற்றும் கே.வி. துரை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில் முனீஸ்காந்த் மற்றும் விஜயலட்சுமி மிடில் கிளாஸ் தம்பதிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த குடும்பக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

