Tuesday, July 2, 2024

முதலில் யார் காதலை சொன்னது தெரியுமா? பிரேம்ஜி -இந்துவின் காதல் பற்றி சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல நாட்களாக பலரின் கேள்வியாக இருந்த பிரேம்ஜியின் கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு விடை ஒருவழியாக கிடைத்துவிட்டது. நாளை திருத்தணி முருகன் கோவிலில் பிரேம்ஜி இந்து என்பவரை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தை கோவிலில் முடித்து, வரவேற்புக்கு அனைவருக்கும் பின்னர் தகவல் சொல்லவேண்டும் என அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், திருமணப் பத்திரிக்கை சோஷியல் மீடியாவில் வெளியாகி விட்டதால், பலரும் தகவல்களை பரப்ப தொடங்கினர். பிரேம்ஜி திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண் நடிகை என்று கூறி, அவரின் புகைப்படம் என சில புகைப்படங்களையும் பகிர்ந்தனர். இதனால் மனமுடைந்த பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “திருமணம் முடிந்த பிறகு நாங்களே மணமக்கள் போட்டோக்களை அனுப்புகிறோம். அதுவரை பொறுங்கள். நடிகை இது அது என எதையாவது வைரலாக்காதீர்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், பிரேம்ஜியை மணக்க இருப்பவரான இந்து குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன. பிரேம்ஜி குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் சொன்ன தகவல்கள் படி, இந்துவின் குடும்பம் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டது என்று தெரிந்தது.

இந்து வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த கல்யாணம் காதல் கல்யாணம்தான். இருவரும் எங்கே, எப்படி அறிமுகமானார்கள் என்று தெரியவில்லை. இந்துதான் முதலில் பிரேம்ஜிக்கு முன்மொழிந்ததாக கூறுகிறார்கள். சில நாட்கள் காதலித்து, பிறகு இருவரின் வீட்டினருக்கும் சொல்லி, நல்ல முடிவை எடுத்துள்ளனர்” என்று தெரிவித்தனர். இந்நிலையில், நாளை பிரேம்ஜிக்கும் இந்துவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது.

- Advertisement -

Read more

Local News