நடிகை பிரணிதா, உதயன், சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற பல படங்களில் நடித்தவர். 2021-ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். 2022-ம் ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் பிரணிதா, அதைப் பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படங்கள் மிகப் பெரிய அளவில் கவர்ச்சிகரமாக இருப்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
அதோடு பிரணிதா வெளியிட்டுள்ள இந்த கர்ப்பகால கிளாமர் புகைப்படங்களுக்கு வாழ்த்துகளுடன் ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவிந்துள்ளன.