Saturday, September 14, 2024

மா.பொ.சி பட தலைப்பு ‘சார்’ என்று மாற்ற காரணம் இவர்தான் – இயக்குனர் போஸ் வெங்கட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெங்கட் போஸ் தனது முதல் படமான கன்னிமாடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்து விமலை வைத்து ‘மா.பொ.சி.’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து இப்படத்தின் தலைப்பை தற்போது ‘சார்’ என மாற்றியிருக்கிறார்கள். படத்தின் டீசர் நாளை வெளியிட இருக்கிறார். இயக்குநர் போஸ் வெங்கட்டிடம், “மா.பொ.சி.தலைப்பை மாற்றியது ஏன்?” என் இயக்குனர் போஸ் வெங்கட், விளக்கமளித்துள்ளார்.

படத்தின் கதை தந்தை மற்றும் மகனுக்கிடையேயான சம்பவங்களைப் பற்றியது. அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த நான், அங்குதான் படப்பூஜையையும் முழுப் படப்பிடிப்பையும் முடித்தோம். என் முதல் படம் ‘கன்னிமாடம்’ மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது. அதன்பின் சமூக அக்கறையுடன் என் அடுத்த படத்தை இயக்கினேன். இதில் விமலின் புதிய ரூபம் காணலாம். அவர் ஆசிரியராக நடிக்கிறார். ‘கன்னிமாடம்’ சாயாதேவி, மகேஷ்பிள்ளை, ‘பருத்தி வீரன்’ சரவணன், நெறியாளர் செந்தில், விஜய் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் இப்படத்தில் சிராஜ் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு இனியன் ஜே.ஹாரிஸால் செய்யப்பட்டு, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ சித்துகுமார் இசையில் ஐந்து பாடல்கள் உள்ளன. நல்ல குழுவால் 34 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. வெற்றிமாறன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் படத்தை வெளியிடுகிறார்.’மா.பொ.சி.’ என பெயரிட்டபோது, நடிகர் சிவகுமார் எங்களை அழைத்து, மா.பொ.சிவஞானம் என்பது பெரிய தலைவரின் பெயர், அவருடைய வாழ்க்கையை டாக்குமெண்டரியாக செய்யவேண்டும் என்று கூறி, வேறு தலைப்பை வைக்கச் சொன்னார். ஹீரோவின் பெயர் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்பதன் சுருக்கமே ‘மா.பொ.சி.’ என்பதை விளக்கினோம், பின்னர் பெயரை மாற்றி ‘சார்’ என வைத்தோம்.

அதேசமயம் ‘பி.டி.சார்’ படம் வெளியானதால், சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கி ‘சார்’ என தலைப்பை வைத்தோம். தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி அனுமதி வாங்கி ‘சார்’ என அறிவித்தோம். தற்போது டீசரும் வெளியாகிறது. நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டீசரை இன்று வெளியிடுகிறார்கள்!” என்று கூறினார் போஸ் வெங்கட்.

- Advertisement -

Read more

Local News