Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மனோரதங்களில் இணைந்துள்ள நடிகை நதியா மற்றும் நடிகர் பகத் பாசில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் மலையாள இயக்குனர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது சிறுகதைகள் தற்போது “மனோரதங்கள்” என்ற பெயரில் ஆந்தாலாஜி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தை மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித் உள்ளிட்ட ஏழு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். படத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன், பஹத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரவிருக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த 9 அத்தியாயங்களில் ஒன்றான “ஷெர்லாக்” என்ற குறும்படத்தில் நடிகை நதியாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்தில் நடிகர் பஹத் பாசிலும் நதியாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த ஆந்தாலஜி படம் விரைவில் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, நதியா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News