Tuesday, November 19, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே அனுமதி மறுப்பு… அதிர்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை நமீதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகையும் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, தன் கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் இன்று (ஆக., 26) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அப்போது பாதுகாப்பு கருதி சில விவரங்களை ஊழியர்கள் கேட்டனர். இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா, மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தபோது, ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில், தன்னை சாமி தரிசனம் செய்ய விடாமல், மன உளைச்சலை ஏற்படுத்தி, அநாகரீகமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவை கேட்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

கோயில் ஊழியர்கள் கூறுகையில், முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது என்றனர். கோயிலில் நடந்த சம்பவம் குறித்து நமீதா, அவரது கணவர் கூறுகையில், ‛‛மதுரை இஸ்கான் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, கோயில் நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம். அப்போது, கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்து, ‘நீங்கள் ஹிந்துவா, முஸ்லிமா’ என கேள்வி எழுப்பி, ‘நீங்கள் முஸ்லிம் என தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஹிந்து என்பதற்கான சான்றிதழ் காட்டுங்கள்’ என்றனர்.

அப்போது, ஆதார் அட்டையை காண்பித்தபோதும், ‘அதில் மத அடையாளம் இல்லை’ என கூறி அவமரியாதையாக பேசினர். 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்து, காக்க வைத்தனர். குங்குமத்தை நெற்றியில் வைத்து உள்ளே அனுமதித்தனர். நாடு முழுவதும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் நாங்கள் ஹிந்து. உரிய விளக்கம் அளித்தும், ஊழியர்கள் ஏற்கவில்லை.இதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். தகுதியான அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.இந்த விஷயம் அறிந்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

- Advertisement -

Read more

Local News