Tuesday, November 19, 2024

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கைவசம் இத்தனை கதைகளா ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இன்றைய பல பிரம்மாண்ட படைப்புகளுக்கான அடித்தளம் எப்போதோ உருவாக்கியவர். அவருடைய பாணியை பல தெலுங்கு மற்றும் ஹிந்தி இயக்குனர்கள் இன்று பின்பற்றுகிறார்கள்.

தமிழில் ‘இந்தியன் 2’ படத்தை முடித்த ஷங்கர், தற்போது தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். ‘இந்தியன் 2’ படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. அதை முடித்த பின், பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். அடுத்து ‘இந்தியன் 3’ படமும் வெளியாக உள்ளது.

இந்த படங்களின் வேலைகள் அடுத்த சில மாதங்களில் முடிவடையும். அதற்குப் பிறகு என்ன மாதிரியான படங்களை இயக்கவிருக்கிறேன் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் தெரிவித்துள்ளார். சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் போன்ற கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்றும் அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டிய படங்கள் என்றும் கூறியுள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News