Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

நியூயார்க் நகரில் மார்டன் உடையில் மாஸ் போஸ்… #AishwaryaRajesh Clicks ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திறமையான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுத்தந்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். ஆனால், அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.

இந்த சூழலில், அவர் மலையாள திரையுலகில் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாவிருக்கின்றன. அதுமட்டுமின்றி, மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களும் வெளியாவிருக்கின்றன. மேலும், தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்வார். தற்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் மாடர்ன் உடையில் இருப்பது, ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News