திஷா பதானி அளித்துள்ள பேட்டியில், எனக்கு தென்னிந்திய படங்கள், வட இந்திய படங்கள் என் பார்க்காமல் அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆசை.பிரபாசுடன் ‘கல்கி’ படத்தில் நடித்துள்ளேன். அதேபோல் சூர்யாவுடன் ‘கங்குவா’ தமிழ் படத்திலும் நடிக்கிறேன்.இது மகிழ்ச்சி அளிக்கிறது.எனது தந்தை போலீஸ் அதிகாரி. தாயார் சுகாதார துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சகோதரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல். எனக்கு விமான படை பைலட் ஆக விருப்பம் இருந்தது. ஆனால் அந்த கனவை விட்டு விட்டு நடிகையாக மாறி இருக்கிறேன். நடனம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்றவை எனக்கு தெரியும் என்று அவரைப்பற்றி பகிர்ந்துள்ளார்.

