Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

நான் அந்த வயதிலேயே அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்… பாலிவுட் நடிகை டிரிப்தி டிம்ரி சொன்ன ஷாக் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் அனிமல். படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபிதியோல், அனில் கபூர், டிரிப்தி டிம்ரி உள்பட பலர் நடித்திருந்தனர்.படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் படத்தில் டரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் திரை உலகில் பேசும் பொருளானது. கடும் விமர்சனத்துக்குள்ளான அவரது கதாபாத்திரம் டிரிப்தி டிம்ரியை இந்திய அளவில் பிரபலமாக்கியது.டிரிப்தி டிம்ரி அடுத்ததாக விக்கி கவுசலுடன் பேட் நியூஸ் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஷாருக்கான் மீது தனக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பு பற்றி கூறியுள்ளார்.அதில், ஷாருக்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். அப்போதே நான் ஷாருக்கானை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறினேன் என கூறினார்.

- Advertisement -

Read more

Local News