அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ளார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.
நானியின் 30வது படமாக ‘ஹாய் நான்னா’ படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை அதிதி பாலன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.