பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர். பிளாக் ஷீப் என்னும் யூடூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்குபெற்று தனது நகைச்சுவை வசனங்களால் பலரின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகியவர். பின்னர், தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். 2019-ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000063737-edited-1.jpg)
அதைத்தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
இந்நிலையில், அளவுக்கு மீறிய மது அருந்தும் பழக்கத்தால் உடல்நிலை மோசமாகி, படுக்கையில் இருந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.