Thursday, August 8, 2024

த்ரிஷாவை தொடர்ந்து ஐடென்டி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த டொவினோ தாமஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு சைக்கோ கிரைம் திரில்லர் படமாக வெளியான “பாரன்சிக்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. முழுவதும் பாரன்சிக் துறையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை அகில்பால் மற்றும் அனாஸ்கான் எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.

இந்த படத்தின் பின்னர் தற்போது அவர்கள் “ஐடென்டி” எனும் படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்திலும் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் திரும்பி வந்துள்ளார் நடிகை திரிஷா. நடிகர் வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா, அதன்பின் நடிகர் வினய் ராய் இருவரும் இந்த படத்தில் தங்களது பகுதிகளை நடித்து முடித்தனர். சுமார் 130 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது நாயகன் டொவினோ தாமஸும் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களுக்கு பிறகு இயக்குனர்கள் மற்ற சில காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள் என்றும், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

- Advertisement -

Read more

Local News