Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

தி கோட் 2050ல நடக்குற கதையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தி கோட்’. இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்பது படத்தின் முதல் பார்வையிலேயே தெரிய வந்தது. இன்று வெளியான வீடியோவில் அவர்களிருவரும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர். அவர்கள் அப்பா, மகனா அல்லது அண்ணன், தம்பியா என்பதும் தெரியவில்லை.வீடியோவின் மூலம் கதை என்னவென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் இருந்தாலும் டீசர் முடிவில் சில வினாடிகளில் நிறைய ஃபேரேம் காட்சிகள் வேகமாகக் கடந்து போகின்றன. அதில் ஒரு காட்சியை நிறுத்திப் பார்த்தால் அதில் ஒரு டிவியில், “Peak Of 11 Billion In 2050” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தப் படம் ஒரு ‘டைம் டிராவல்’ கதை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. எந்தெந்த காலகட்டங்களில் கதை பயணிக்கப் போகிறது என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

- Advertisement -

Read more

Local News