இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் ‘தி கோட்’. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் ரூ.315 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அப்பா வேடத்தில் நடித்த விஜய்க்கு மனைவியாக சினேகா நடித்துள்ளார். சினேகாவின் நடிப்புக்கும் பெரும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் இந்த பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை இயக்குநர் தேர்ந்தெடுத்திருந்தாராம். ஆனால்… சமீபத்தில், நமது டூரிங் டாக்கீஸ் சேனலில் ‘தி கோட்’ படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் வெங்கட்பிரபு நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவற்றை முழுவதும் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.