வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தில் டீ ஏஜீங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தி என்ற கதாபாத்திரத்தில் விஜய்யும் ஜீவன் கதாபாத்திரத்தில் விஜய்யின் மகனாக டீ ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் மகன் விஜய்யை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.
இந்நிலையில் சமீபத்தில் நம்முடைய டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ள வெங்கட்பிரபு விஜய்யின் தி கோட் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் சார் இயக்குனர் பெரிய நடிகர் என்ற வித்தியாசம் பார்க்காமல் ஜாலியாக இருந்தார். அவயர் டிக்கும் போது ஏதாவது ஓவராக இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்ளலாம் என மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார். கோட் படத்தினை இன்னும் டைம் கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக பண்ணிருக்கலாம் என்றுள்ளார் வெங்கட்பிரபு. அதுமட்டுமின்றி கோட் படத்தில் காந்தி கதாபாத்திரத்தினை டிசைன் செய்யும் போது விஜய் அவர்கள் சில மாற்றங்களை சொன்னார் அவர் சொன்னபடியே சிறப்பாக கதாபாத்திரத்தினை வடிவமைத்தோம். அதுபோல முக்கியமாக ஜீவன் கதாபாத்திரத்தின் தோற்றம் முதலில் இப்படி தான் இருந்தது என்று அவருடைய மொபைலில் இருந்த கேரக்டர் டிசைனை காண்பித்தார். மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தை… மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு நமது டூரிங் டாக்கீஸ் சேனலுடன் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடூட்யூப் ங்க்-ஐ கிளிக் செய்து கண்டு மகிழுங்கள்!