Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

தி கோட் படத்தின் அடுத்த முக்கிய அப்டேட் -ஐ கொடுத்த வெங்கட் பிரபு… #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, அண்மையில், ‘கோட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதளத்தில் ‘கோட் படத்தின் அடுத்த அப்டேட் 3வது பாடல்’ என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

- Advertisement -

Read more

Local News