பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் சிறுவயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் கவுரி கிஷன். அதன் பின்னர், ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’, ‘அடியே’ போன்ற பல திரைப்படங்களிலும், சில வெப்சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இத்துடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வரும் கவுரி கிஷன், சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்கு தனது தோழிகளுடன் சென்ற சுற்றுலா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோக்களில், பீச்சில் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆடும் காட்சிகள், படகில் சுவாரஸ்யமாக பயணிக்கும் தருணங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.