Saturday, September 14, 2024

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கெமிஸ்ட்ரி என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே நான் தான் – நடிகர் பிரசாந்த் #ANDHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தின் ‘அந்தகன் ஆந்தம்’ பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘அந்தகன் ஆந்தம்’ பாடலை திரையிட்டனர். அதற்கு முன்னதாக அந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பிரபுதேவா முன்னிலையில், தனியாக வெளியிடப்பட்ட வீடியோவையும் திரையிட்டனர். இந்த பாடலை வெளியிட உடனடியாக சம்மதம் தெரிவித்து வெளியிட்ட தளபதி விஜய்க்கு தனது நன்றிகளை பிரசாந்த் கூறினார். அப்பா தியாகராஜன் இயக்கத்தில் நடித்தது குறித்தும் பிரசாந்த் மகிழ்ச்சியுடன் பல விஷயங்களை ஷேர் செய்துக் கொண்டார்.

சிம்ரனுக்கும் உங்களுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி பற்றி சொல்லுங்க பிரசாந்த் என்கிற கேள்விக்கு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கெமிஸ்ட்ரி என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே நான் தான் எனக்கூறினார். விஜய் டிவியில் கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜோடி நம்பர் ஒன் முதல் சீசனில் பிரசாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் ஜட்ஜாக இருந்தனர். 

அப்போது தான் கெமிஸ்ட்ரி என்பதை தான் அறிமுகப்படுத்தியதாக பிரசாந்த் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார். மேலும், “நைட்ரேட், கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன்” என ஏகப்பட்ட கெமிஸ்ட்ரி வார்த்தைகளையும் சேர்த்து அந்த கேள்விக்கு நகைச்சுவையாக பிரசாந்த் பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News