Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் துணை நடிகராக காமெடி கலாட்டா செய்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவைச் சேர்ந்த இவர் ஃபைட்டராக தனது கேரியரை தொடங்கியவர். தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வடிவேலுவின் ரீ-என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவிற்கு நடிகர் வடிவேலு நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வெங்கல் ராவ், தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார்.

தன்னுடைய ஒரு கால் மற்றும் ஒரு கை விழுந்து விட்டதாகவும், தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு, சக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவை தனக்கு சிகிச்சைக்காக உதவ வேண்டும் என்றும் வெங்கல் ராவ் கேட்டுக்கொண்டிருந்தார். தொடர்ந்து, நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கினார். கேபிஒய் பாலா ஒரு லட்சமும், நடிகர் வடிவேலு ஒரு லட்சமும், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரமும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சில ஆயிரங்களை வெங்கல் ராவிற்கு கொடுத்திருந்தனர்.

தனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வெங்கல் ராவ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். சிம்பு, கேபிஒய் பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவேலு ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் கொடுத்த பண உதவியும் இந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் வெங்கல் ராவ், இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News