நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப் படம் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் திரைப்பட காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த அனைத்து தயாரிப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.உங்களை அணுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்று வழங்கியதை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்றுள்ளார் நயன்தாரா.


