Tuesday, July 2, 2024

தக் லைஃப் படத்தில் களமிறங்கும் மற்றொரு பிரபலம்… நாளை வெளியாகும் அசத்தல் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தான் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகள் பிறகு மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்ல் இருந்து ஃபோட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியான இந்த புகைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் உள்ளனர்.அதில் கமல்ஹாசனின் சத்யா பட லுக்கில் கமல் காணப்படுகிறார். முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டைட்டில் பிரமோவில் நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் காணப்பட்ட கமல்ஹாசன், தற்போது ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் நியூ லுக்கில் இருக்கிறார்.

தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருந்த சூழலில் அவர்கள் இருவரும் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.தற்போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் பதிவுகளில் இவர்கள் இருவரின் பெயர்கள் டேக்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதை காணும் போதே இவர்கள் இருவரும் நடிக்க வாய்பில்லை என்றவாறு கூறப்படுகிறது.

அதே சமயம் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் களமிறங்கியுள்ள சூழலில் ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இதில் அரவிந்த்சாமி, அசோக் செல்வன் ஆகியோர் இப்படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படக்குழு சார்பில் நாளை வெளியாகவுள்ள அப்டேட்டில் ஜெயம் ரவிக்கு பதிலாக படத்தில் இணையுள்ள நடிகர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News