Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

டிடி ரிட்டர்ன்ஸ் 2 விரைவில் முழு கதையும் ரெடி… எப்போது படப்பிடிப்பு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சந்தானத்திற்கு ஹாரர் படங்கள் தொடர்ந்து கைகொடுத்து வருகின்றன. ‘தில்லுக்கு துட்டு’, அதன் இரண்டாம் பாகம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என அவர் நடித்த பேய்ப்படங்கள் அவருக்கு வசூலை அள்ளிக்கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் இப்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘இங்க நான்தான் கிங்கு’ படங்களை அடுத்து அவர் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூலையில் வெளியான படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘பேயோடு கேம் விளையாடுறது தான்’ படத்தின் கதை. சந்தானத்தின் காமெடி ரைட்டர்ஸ் டீமில் உள்ள எஸ்.பிரேம் ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சுரபி, ‘பெப்சி’ விஜயன் எனப் பலரும் நடித்திருந்தனர். ‘சபாபதி’ படத்தைத் தயாரித்த சி.ரமேஷ்குமார் இதனை தயாரித்திருந்தார். அதன் வெற்றிக்கு பின், ஹாரர் பக்கம் திரும்பாமல் இருந்த சந்தானம், மீண்டும் பேய்க்கதையை கையில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்தின் நண்பரான ஆர்யாவும் ஒரு தயாரிப்பாளராக களம் இறங்கியிருக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்தே இந்த படத்தையும் இயக்குகிறார். சந்தானத்தைப் பொறுத்தவரை அவர் இயக்குநரின் நடிகர். ஆனால், அந்த படத்தின் கதை உருவாவதற்கு முன்னால் அதன் கதை விவாதங்களில் பங்கேற்பதுடன், தன் நேரத்தையும் செலவிடுவார். அதன்படி இப்போது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இயக்குநர் டீமுடன் கதை விவாதத்தில் பங்கேற்று திரும்பியிருக்கிறார்.

இன்னும் ஒருசில வாரங்களில் முழுக்கதையும் தயாராகிவிடும் என்றும், இந்தப் படத்திற்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’ என்ற டைட்டில் இருக்காது.. ஃப்ரெஷ்ஷான டைட்டில் தான் இருக்கும் என்கின்றனர். கதையும் கப்பலில் நடக்கின்ற கதை என்கிறார்கள். இதற்காக கப்பல்கள் சிலவற்றை தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்த படத்தில் ‘நிழல்கள்’ ரவி, ‘லொல்லு சபா’ மாறன், கிங்ஸ்லி, முனீஸ்காந்த், சாய்தீனா என அவரது வழக்கமான டீம் நடிகர்களும் இதில் இருப்பார்கள் எனத் தெரிகிறது. கதாநாயகியாக டோலிவுட் நாயகி ஒருவர் கமிட் ஆகியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை முடித்துவிட்டே, அடுத்த படத்தை அறிவிக்க உள்ளார் சந்தானம்.

- Advertisement -

Read more

Local News