Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘ஜன நாயகன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் பட இயக்குனர்களா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது, அது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு வலுவாக இருக்கிறது, காரணம் இதுவே நடிகர் விஜயின் கடைசி படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் (பொங்கல்) வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய இயக்குனர்கள் ‘ஜனநாயகன்’ படத்தில் வரும் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் என்றும் மேலும், அவர்கள் நடிக்கும் அந்த காட்சிகள் நடிகர் விஜய்க்கான “செண்ட் ஆஃப்” காட்சிகள் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அட்லீ இயக்கத்தில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’, ‘லியோ’, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News