Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

செங்கோல்-ஐ கோட்டைவிட்ட ராணவ்… பல்லாக்கு டாஸ்கில் வெல்லப்போவது யார்? #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் அரண்மனை டாஸ்க்கில், ஆண்கள் அணி ராணியின் செங்கோல்-ஐ சதி செய்து திருடினார்கள். பெண்கள் அணி, அந்த செங்கோலை மீண்டும் கைப்பற்ற பலமுறை முயன்றாலும், எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இறுதியில், சாச்சனா இரவு யாரும் இல்லை என்ற சூழலில் அந்த செங்கோலை திருட முயன்றார். ஆனால், அதை ஆண்கள் அணியிடம், குறிப்பாக ராணவிடம் திருப்பிக்கொடுத்தது அவரை சிக்கிய நிலைக்கு ஆளாக்கியது. ராணவ், பெண்களுடன் விளையாட்டுத்தனமாக பேசி, இறுதியில் அவர்களுக்கே செங்கோலை திருப்பி கொடுத்து ஏமாந்தார்.

இதைத் தொடர்ந்த இன்று, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு பல்லக்கை வழங்கினர். இந்த பல்லக்கை ராணிக்கும் ராஜாவுக்கும் பயன்படுத்தலாம். முதலில், ஆண்கள் அணி ராஜாவை பல்லக்கில் ஏற்றி அரியணை அருகே கொண்டு சென்றனர்.

பின்னர், அந்த பல்லக்கை பெண்கள் அணிக்குக் கொடுக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தது. ஆனால், ஆண்கள் அணி அதை மறுத்து சண்டை போட்டனர். பெண்கள் அணி பல்லக்கை கைப்பற்ற முயன்றபோது, ராஜா அதில் ஏறி நின்று, பல்லக்கை எடுக்க முடியாத அளவிற்கு தடையாக இருந்தார்.இவ்வாறு இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News