நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி நடந்து வரும் சூர்யாவின் காட்சி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்தமான் மற்றும் ஊட்டியில் நடைபெற்று வந்த சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு இடுக்கியில் துவங்கியது.
இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா மற்றும் ஸ்ரேயா இணைந்து நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.