Monday, November 18, 2024

சின்ன வயசுல நானும் யுவனும் கேப்டன் முன்னாடி டான்ஸ் எல்லாம் ஆடி காட்டி இருக்கோம்… மனம் திறந்த பிரேம்ஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். “நான் படத்தை ஏழு எட்டு முறை பார்த்திருக்கிறேன். படத்தில் நான் சினேகாவின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் வாழ்க்கையில் நான் அதிகமாக நேரத்தை யுவனுடன் செலவிட்டிருக்கிறேன். யுவனிடமிருந்து வேலை பார்க்கும்போது நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்; அதுவே எனக்குப் பெரிய பாக்கியம். எனது இசை ஆசான் யுவன் தான், என்றார்.

நான் கேப்டனை ரொம்ப சின்ன வயதிலேயே பார்த்துள்ளேன். அப்பாவுடன் கோயில் காளை என்ற படத்தில் நடித்திருந்தார். பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி கேப்டன் வந்தார். சின்ன வயதில், கேப்டன் முன்னாடி நானும் யுவனும் கேப்டன் பாடலை போட்டு ஆட்டம் போடவும், டான்ஸ் ஆடியும் காட்டியிருக்கிறோம்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News