மலையாளத் திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,

“சினிமா துறையில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பது போல் முகமூடி அணிந்து, நல்ல பெயரை சம்பாதிக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இப்படிப்பட்ட முகமூடி அணிந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்கும் போல் எப்போது பேசவேண்டும் என்பதை அறிவார்கள்.
ஆனால் கேமரா க்ளோஸாகும்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் என்பதை நேரில் கண்டுள்ளேன். ஆண், பெண் இடையே உள்ள பேதம் சினிமா துறையில் இன்னும் ஆழமாக இருக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரும் என்பதைக் கூற முடியவில்லை,” என தெரிவித்தார்.