Saturday, September 14, 2024

சர்தார் படத்தில் இணைந்த நடிகை ரஜிஷா விஜயன்… #SARDAR 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாக்கப்படுகிறது. இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றுகின்றார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஏற்கனவே இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அடுத்ததாக, தற்போது இந்தப் படத்தில் சர்தார் முதல் பாகத்தில் கார்த்தியின் அப்பா கதாபாத்திரத்தின் மனைவியாக முக்கியமான பாத்திரத்தில் நடித்த ரஜிஷா விஜயனும் சர்தார் 2ம் பாகத்தில் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News