இயக்குனர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய சில படங்கள் பெரிதாக செல்லவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்த அவர், கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து G.O.A.T. படத்தை இயக்கியுள்ளார். அஜித்திற்கு மெகா ஹிட்டை கொடுத்ததைப் போல விஜய்க்கும் இதே ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் கலவையான வரவேற்பைப் பெற்றன. இதனால் விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதன் பின், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே வெங்கட் பிரபு மீண்டும் மரியாதையைப் பெற்றார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000058927-576x1024.jpg)
இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், கோட் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்ததை நமது டூரிங் டாக்கீஸ்-ன் சேனலுக்கு பேட்டி அளித்து தெரிவித்தார். மேலும், அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்களை காண வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.