தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பல படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போல்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காரணமாக யுவகணங்களில் டிரெண்டாகி வருகிறார். தனது எக்ஸ்ட்ரா அழகை காட்டி இஷ்டத்துக்கு ரசிகர்களை வசீகரித்து வரும் ஹனி ரோஸ் ரேச்சல் என்ற படத்தில் நடித்துள்ளார்.


அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ரேச்சல் படத்தின் டீசரில் ஹனி ரோஸ் கோபக்கார பெண்ணாக கொலை வெறியுடன் பேசும் வசனங்களும், ஆத்திரத்தில் சிலரை வெட்டி வீசும் காட்சிகளும் நிறைந்துள்ளன. இப்பொழுது இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திடீரென ரேச்சலாக கொலைவெறி பிடித்த பெண்ணாக மாறியுள்ளார். கவர்ச்சி மிஸ் ஆகாத வகையில் கவர்ச்சி உடையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் காட்சிகளை எல்லாம் டீசரில் வைத்துள்ளனர்.

அந்த இரவில் இரண்டு சிவந்த கண்களை பார்த்தேன். அவனை தேடி கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என டீசரில் வெறித்தனமாக ஹனி ரோஸ் பேசும் காட்சிகளும் உள்ளன. முன்னணி நடிகைகள் வுமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க முயற்சிப்பது போல ஹனி ரோஸும் அந்த பாதையை ரேச்சல் படத்தின் மூலம் தேர்வு செய்துள்ளார்.