கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் கல்கி படங்கள் சில வாரங்களில் வெளியாக இருக்கின்றன. அதைத்தொடர்ந்து அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. செர்பியாவில் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு கமல்ஹாசனின் தேர்தல் வேலைகளால் தாமதமான நிலையில், மணிரத்னம் படத்தின் அடுத்த கட்டங்களை விரைவாக முடிக்கும் முயற்சியில் இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தையே 155 நாட்களில் இரண்டு பாகங்களாக முடித்த அவர், தக் லைஃப் படம் இதுவரை நீண்டது. தற்போது இந்த படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்து, இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, படத்தின் முழுமையான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. டெல்லி, ஜெய்சல்மார் போன்ற இடங்களில் படத்தின் அடுத்த கட்டங்களை முடித்த மணிரத்னம், கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியிலும் படப்பிடிப்பு செய்துள்ளார். கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் இணைந்து நடித்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன.
மூன்று கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக கேரளாவில் ப்ரீ-கிளைமாக்ஸ் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா இணையவிருக்கிறார். இதைத் தொடர்ந்து பாங்காக், செர்பியா போன்ற வெளிநாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது