Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

குக் வித் கோமாளி 5வது சீசன் டைட்டிலை வென்ற பிரியங்கா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடந்திருக்கின்றன. இந்த ஐந்து சீசன்களிலேயே இப்போது முடிந்திருக்கும் சீசன் சர்ச்சைகளை அதிகம் சம்பாதித்தது. ஒருபக்கம் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற; மறுபக்கம் பிரியங்கா ரொம்ப டாமினேஷன் செய்கிறார் என்று சொல்லி ஆங்கராக இருந்த மணிமேகலையும் வெளியேறினார். சூழல் இப்படி இருக்க குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னராக பிரியங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் பிரியங்கா, இர்ஃபான், ஜோயா, விடிவி கணேஷ், பூஜா, சுஜிதா என ஆறு பேர் பங்கேற்றனர். இதில் பிரியங்காவை டைட்டில் வின்னராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ராமருக்கு கோமாளியாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாவது பரிசை சுஜிதா – புகழ் ஜோடி வென்றிருக்கிறது. அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News