Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

கிளாமர் உடையில் ஹாட்டாக போஸ்… வரலாறு பட நடிகையா இது என் ரசிகர்கள் ஷாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரலாறு திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகை கனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து, ரசிகர்கள் மனதில் பெயர் பெற்றார்.

நடிகை கனிகாவின் அழகான தமிழ் உச்சரிப்பும், இனிமையான குரலும் இவருக்கு தமிழ் திரையுலகில் நுழையும் வாய்ப்பை தேடித்தந்தது. இயக்குனர் சுகி கணேசன் இயக்கத்தில் உருவான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். காதல் திரைப்படமான இப்படத்தில், நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா. இதையடுத்து, எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே 2008ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கனிகா, திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். அந்த தொடரில் புடவையில் குடும்ப பெண்ணாக நடித்து அசத்திய இவர், தற்போது தனது இன்ஸ்டாவில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News