Tuesday, July 2, 2024

கில்லி படத்தை மாதிரி ஜல்லி ரீ ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்… சந்தானம் செம்ம FUN பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் இந்த வாரம், மே 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், இங்க நான் தான் கிங்கு படத்தை ப்ரோமோஷன் செய்யும் நோக்கில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சந்தானம், லொள்ளு சபாவில் வெளியான ஜல்லி நிகழ்ச்சியை மீண்டும் வெளியிடும் திட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘கில்லி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தப் படத்தின் ஸ்பூஃப் வடிவமான ‘ஜல்லி’ எனும் லொள்ளு சபா வீடியோ சந்தானம் நடிப்பில் வெளியானது, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

‘சச்சின்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, ‘ஜல்லி’ வீடியோவை பார்த்து முடித்த பிறகு, “ரொம்ப சூப்பரா இருந்துச்சு, நல்லா சிரிச்சு என்ஜாய் பண்ணேன்” என தன்னுடைய பாராட்டுகளை தளபதி விஜய் தெரிவித்ததாக சந்தானம் கூறியுள்ளார்.

விஜய்யுடன் இணைந்து ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘தலைவா’ போன்ற படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்திருக்கிறார் சந்தானம்.’கில்லி’ படம் ரீ ரிலீசாகி 30 கோடிக்கும் மேலான வசூலை செய்து வரும் நிலையில், ‘ஜல்லி’ படத்தையும் ரீ ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தனது காமெடி பாணியில் சந்தானம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News