Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காதல் ப்ரபோஸ் செய்ய டிப்ஸ் கொடுத்த ஸ்ரேயா கோஷல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் கலந்து கொண்ட லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரேயா கோஷல் பாட துவங்கிய போது கேலரியில் அமர்ந்திருந்த ரிஷி மற்றும் மந்தாரா என்கிற காதல் ஜோடி எழுந்தனர். ஸ்ரேயா கோஷலிடம் உங்கள் முன்பாக என் காதலியிடம் காதலை சொல்லப் போகிறேன் என்று கூறினார் ரிஷி.அவரை ஊக்கப்படுத்திய ஸ்ரேயா கோஷல், “ஆயிரக்கணக்கானோர் இங்கே கூடியிருக்கின்றனர். நீங்கள் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டால் அதை சரியாக செய்யுங்கள். உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் தான் இருக்கிறது” என்று கூறினார்.‌ அதைத்தொடர்ந்து தனது காதலியின் முன் மண்டியிட்டு தனது காதலை அவர் வெளிப்படுத்த, அந்த சந்தோஷத்தில் அவரது காதலி மட்டுமல்ல அருகில் இருந்தோர் அனைவரும் சந்தோஷ கூச்சலிட்டனர். இது குறித்த சில வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News