நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து அதிகமான வசூலையும் குவித்தது. இந்த படத்தில் வசந்த் ரவியின் மனைவியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார் மிர்னா. தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மிர்னா.


ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம், அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்து சிறப்பான கவனத்தைப் பெற்ற மிர்னா, தெலுங்கில் கிரேசி ஃபெல்லோ, உக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து, ஜெயிலர் படத்தில் அவருக்கு லீட் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்தார்.

மிகவும் பிஸியாக வலம் வரும் இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். மிர்னாவை இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வரும் மிர்னா, தற்போது கருப்பு நிற மார்டன் புடவையில் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மனதை மின்னல் போல் தாக்கியுள்ளார்.


