நடிகை அமலாபால் திருமணத்திற்கு பின்பு மீண்டும் சினிமாவில் என்ட்ரி சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் அமலா பால்.
தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை அவர் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவழித்து வரும் அமலா பால், விதவிதமான சேட்டைகளுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணாடி போட்டு பார்க்கிறார், தலையை கோதுகிறார். இவரின் சேட்டைகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி, தன்னுடைய கணவர் தன்னுடைய காலை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.