Tuesday, November 19, 2024

கங்குவா படத்தோடு மோதுகிறதா மார்ட்டின்? துருவா சர்ஜா சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அர்ஜுன் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

மார்ட்டின் திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்துடன் போட்டியா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த துருவா சார்ஜா, மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை 10 ஆம் தேதி பாருங்கள். என் படத்தை 11 ஆம் தேதி பாருங்கள் என்றார்.

இந்த நிகழ்வில் துருவ சார்ஜாவிடம் பாலிவுட்டில் எந்த நடிகர் பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த துருவ சார்ஜா, பாலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் சஞ்சய் தத் என்று கூறினார். மேலும் மார்ட்டின் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இதில் சஞ்சய் தத் என்னுடன் நடித்துள்ளார். சிறந்த நடிகருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார். அதுபோல், தெலுங்கில் எந்த நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர் எனக்கு பிடிக்கும் என்று பதிலளித்தார்.

- Advertisement -

Read more

Local News