சேது’ படத்தில் இருந்து தற்போது ‘தங்கலான்’ மற்றும் ‘வீர தீர சூரன்’ வரை, தனது ஒவ்வொரு படத்திலும் புதுமையான மாற்றங்களை எடுத்து, முழுமையாக தன்னையே அர்ப்பணித்து நடித்து வருபவர் விக்ரம். முதல் படத்திலிருந்து இன்று வரை, அவரது இந்தத் தேடலும், அர்ப்பணிப்பும் குறையவில்லை. சினிமாவை அவர் அந்த அளவுக்கு நேசிப்பவர். தற்போது, ‘தங்கலான்’ படத்திலும் அதே அர்ப்பணிப்புடன் நடித்து அசர வைத்திருக்கிறார்.
இந்நிலையில், பாலிவுட்டில் சித்தார்த் கண்ணன் என்பவரின் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சினிமா தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது அவரிடம், ‘ராவணன்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் உடனான நட்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரம், “ஐஸ்வர்யா மிகவும் உறுதியானவர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அபிஷேக்கும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் தான். ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் திரையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆனால் நாங்கள் இரண்டு படத்திலும் மட்டுமே இணைந்திருக்கிறோம்.”
அவர் தொடர்ந்தார், “நான் மணி சாரிடம் கேட்டேன். தயவுசெய்து, ஒரு படத்தில் எங்களை ஒன்றாக சேருங்கள் என்று. ஐஸ்வர்யா ஒரு அற்புதமான நடிகை. அவருடன் பணிபுரிவது எளிதாக இருக்கும்,” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.