Saturday, September 21, 2024

எ.என்.ஆர் விருது பெறும் நடிகர் சிரஞ்சீவி… #ANR100

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவ். அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரிந்தவர். அவரது ‘தேவதாஸ்’ படம்தான் இன்றைய பல காதல் திரைப்படங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியான படமாக இருக்கிறது. .தொடர்ந்து ‘மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, அலாவுதீனும் அற்புத விளக்கும், மஞ்சள் மகிமை, அதிசயப் பெண், கல்யாணப் பரிசு, தெய்வமே துணை, வாழ்க்கை ஒப்பந்தம், எங்கள் செல்வி, பாட்டாளியின் வெற்றி, அன்பு மகன், மனிதன் மாறவில்லை,’ என 1969 வரை தொடர்ந்து தமிழிலும் நடித்தார்.

அதன் பின் தெலுங்கில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வந்தார்.அக்கினேனி நாகேஸ்வரராவின் நூற்றாண்டு கொண்டாட்டம் மத்திய அரசு ஆதரவுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன் துவக்கமாக ‘எஎன்ஆர் – கிங் ஆப் த சில்வர் ஸ்கிரீன்’ திரைப்பட விழா, என்எப்டிசி உதவியுடன் பிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் மூலம் நேற்று அவரின் மகனான நாகர்ஜுனா மற்றும் அவரோடு குடும்பத்தினரால் ஐதராபாத்தில் கொண்டாடப்பட்டது. அவர் நடித்த ‘தேவதாஸு’ படத்தை நேற்று திரையிட்டனர்.

நாடு முழுவதும் 31 நகரங்களில் அக்கினேனி நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றுள்ளனர். நவம்பர் மாதம் நடைபெற உள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்திய அரசு கொண்டாட உள்ளது.2024ம் ஆண்டிற்கான ‘எஎன்ஆர்’ நினைவு விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அக்டோபர் 28ம் தேதி திரையுலகத்தினர் கலந்து கொள்ள அந்த விருதை அமிதாப்பச்சன் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

- Advertisement -

Read more

Local News