Saturday, September 14, 2024

என் பெயர் இதுதான் இது இல்லை… ஏன் இப்படி பண்றீங்க… டென்ஷன் ஆன நித்யா மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நித்யா 2006-ஆம் ஆண்டு கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனது தனிப்பட்ட இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான “காஞ்சனா-2,” “ஒகே கண்மணி,” “மெர்சல்,” “திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

இந்த நிலையில், ஒரு நேர்காணலில், தன்னுடைய பெயர் பின்னொட்டாக சாதியப் பெயராக இல்லை என விளக்கமளித்துள்ளார். “மேனோன்” அல்ல, “மெனன்” எனத் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளதிலே, நித்யா கூறியிருப்பதாவது: யாருமே எனது பெயரை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு அடையாளச் சிக்கல் இருக்கிறது. படப்பிடிப்பில் இரண்டு ஷெட்யூல் முடிந்ததும், ‘மேடம், கொச்சிக்கு டிக்கெட் புக் செய்யட்டுமா?’ எனக் கேட்கிறார்கள். என்னுடைய காரை பாருங்கள். கன்னடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் இந்தப் பெயருக்கு முன்பு பெற்றோர்களின் பெயர் வைப்பது வழக்கமாக இருக்கிறது. அதுபோல நான் என்.எஸ். நித்யா என சிறு வயதில் வைத்துக் கொண்டேன். என்-அம்மா பெயர் நளினி, எஸ்-அப்பா பெயர் சுகுமார். அதனால் இந்தப் பெயர். என்.எஸ். நித்யா என வைத்துக் கொண்டேன்.

இந்தப் பெயர் கடவுச்சீட்டில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் “மெனன்” எனும் பெயரை வைத்தேன். ஜோதிடம் பார்த்து மெனன் என வைத்தேன். சாதியின் பெயரைப் பயன்படுத்த எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பிடிக்காது. பெயரை கேட்பவருக்கு நான் எங்கிருந்து வந்தேன் எனத் தெரியக்கூடாது என வைத்தப் பெயர்தான் “மெனன்.” ஆனால், அனைவரும் அதை கேரளத்தில் சாதியப் பெயராக “மேனோன்” என நினைத்துக்கொண்டார்கள். நான் வைத்த பெயர் எனக்கே பாதிப்பாக அமைந்துவிட்டது, என்றார்.

- Advertisement -

Read more

Local News